Home Blog

Teddy Movie Review – டெடி விமர்சனம்

0
நடிகர்கள்:

ஆர்யா,சயீஷா

இயக்கம்: சக்தி சௌந்தர்ராஜன்சினிமா வகை:Action, Thrillerகால அளவு:2 Hrs 10 Min

வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால் ஸ்ரீ(சயீஷா) கடத்தப்படுவதுடன் படம் துவங்குகிறது.
அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். அதன் பிறகு சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. நம்ப முடியவில்லை தான், ஆனால் படத்தில் அப்படித் தான் காட்டியிருக்கிறார்கள். அந்த டெடி பொம்மை ஓசிடி மற்றும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் திறன் கொண்ட சிவாவுடன்(

ஆர்யா) நட்பாகி ஸ்ரீ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறது.

புதுமையான கதையை திரையில் காட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதில் இயக்குநருக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது. கதை இப்படியே ஜாலியாக செல்லாது சீரியஸாகிவிடும் என்று தெரிந்தும் ரசிக்க வைக்கிறது.

எதிலும் வல்லவர் என்று ஆர்யாவை காட்டியிருப்பது பல இடங்களில் பொருத்தமாக இருந்தாலும் சில இடங்களில் ஏற்கும்படி இல்லை. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகள்.

ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இமானின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. டெடி கதாபாத்திரத்திற்கான விஎஃப்எக்ஸ் பணியை பாராட்ட வேண்டும். ஆர்யாவை தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் சதீஷ் இதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் என்ன செய்தாரோ அதையே தான் மீண்டும் செய்திருக்கிறார். கருணாகரனின் கதாபாத்திரம், வில்லன் மகிழ் திருமேனியின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை. ஆர்யா, சயீஷா இடையேயான எமோஷனல் காட்சிகள் ஓரளவுக்கு கை கொடுத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டே நிறைவடைந்தும், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது.எனினும்,படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,’நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்தகவலை அறிந்து உற்சாகமான ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியில் ரீமேக்காகும் ஷங்கரின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர்.தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.

இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

ஒரு வழியாக கிடைத்தது வலிமை அப்டேட் ! – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதற்கிடையில், வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.ஆனால், தயாரிப்பு தரப்போ படம் குறித்த எந்த அப்டேட்டையும் இதுவரை வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.

இந்நிலையில்,வலிமை’படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில்… “திரு. அஜித் குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி முதல் ‘வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பர பணிகள் தொடங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

பரியேறும்பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை இயக்கினார். Dhanush, லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். Thandoraa ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை வெளியான தனுஷ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ‘கர்ணன்’ பெற்றுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்.

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்துக்குப் பிறகே மாரி செல்வராஜ் – தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.